தமிழக அரசு ஜிஎஸ்டி மசோதாவை எதிர்க இது தான் காரணம்..!

சென்னை: பெரும் உற்பத்தி மாநிலமான தமிழ்நாடு ஜிஎஸ்டி மசோதா அமலாக்கத்தினால் உற்பத்தியாளர்கள் அதிக பயன்பெறுவார்கள் என்றாலும் அரசின் வருவாய் குறைந்துவிடும் என்று அஞ்சுகிறது.

இதன் காரணமாகவே கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசிடம் காட்டி வருகிறது.

தமிழக அரசின் இந்த எதிர்ப்பு சரியானதா..?

ஒரு நாடு ஒரே வரி

ஒரு நாடு ஒரே வரி

நாடு முழுவதும் ஒரே வரி என்று அமலுக்கு வரும் போது இந்தியாவில் ஆடோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல், ஜவுளி போன்ற பல துறைகளில் அதிகப்படியான உற்பத்தி செய்யும் மாநிலமான தமிழகம் இதன் மூலம் பெற்று வந்த வரி வருவாயை இழக்கும்.

போக்குவரத்து செலவுகள் குறையும்

போக்குவரத்து செலவுகள் குறையும்

ஆனால் ஜிஸ்டி மசோதா இயற்றப்பட்டால் உற்பத்தி நிறுவனங்களுக்கு 20% வரை போக்குவரத்து செலவுகள் குறையும் என்று எதிர்பார்க்கின்றனர். இதனால் பொருட்கள் விலையும் குறை வாய்ப்புள்ளது.

இரண்டு அவைகளிளும் எதிர்ப்பு

இரண்டு அவைகளிளும் எதிர்ப்பு

லோக் சபா, ராஜிய சபா என இரு அவைகளிலும் கடைசி வரை எதிர்ப்பு தெரிவித்தது அதிமுக கட்சி உறுப்பினர்கள் மட்டுமே. லோக்சபாவில் ஆதரவு தெரிவிக்காத சில கட்சிகளும் நேற்று ஜிஎஸ்டி மசோதாவை ஏற்றுக்கொண்டனர் ஆனால் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

கவலை அளிக்கும் விதமாக உள்ளது

கவலை அளிக்கும் விதமாக உள்ளது

தமிழக முதலவர் ஜெயலலிதா அவர்கள் இது பற்றி கூறுகையில் நாங்கள் கொடுத்த சில பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி ஆனால் நாங்கள் அளித்த பல பரிந்துரைகள் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை என்றும் இது மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளதாகவும் கூறினார்.

வாட் வரி

வாட் வரி

மாநிலத்தில் ஏற்கனவே வாட் வரி செயல்பட்டு வரும் போது, இது போன்ற சட்ட ரீதியான ஜிஎஸ்டி தேவை இல்லை என்றும் தற்போது எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

பெட்ரோலியம் பொருட்கள்

பெட்ரோலியம் பொருட்கள்

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களுக்கு மொத்தமாக ஜிஎஸ்டி-யில் இருந்து விளக்கு அளிக்க வேண்டும். புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் மீது அதிக வரி விதித்து மாநிலங்களில் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இழப்பு

இழப்பு

தமிழ்நாட்டைப் போன்று உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு அந்த மாநிலத்திம் முக்கிய வரி வருவாயை ஜிஎஸ்டி வாயிலாக மொத்தமாக இலக்க நேரும்.

உயர் வருவாய்-நடுநிலை விகிதங்கள் நிர்ணயம் சிரமம் போன்றவற்றால் தமிழகத்திற்கு ஜிஎஸ்டி ரூ.9,270 கோடி வரை வருவாய் இழப்பு நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜெயலலிதா கூறினார்.

 

இழப்பீடு

இழப்பீடு

இதனால் மத்திய அரசு இச்சட்டத்தை இயற்றினால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,270 கோடி வரை இழப்பீடு நேர்வதால் தமிழகத்திற்கு தகுந்த இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆலோசனை

ஆலோசனை

ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி-இல் அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டியில் இருந்து 4 சதவீதத்தை மாநிலத்திற்கான ஜிஎஸ்டியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தில் அதிமுக எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் அதிமுக எதிர்ப்பு

நேற்றைய ஜிஎஸ்டி மீதான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற அதிமுக உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் பேசும் போது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் திருத்த மசோதா (ஜிஎஸ்டி) செல்லாது என்றும் இது தமிழகத்தை போன்ற உற்பத்தி மாநிலங்களுக்கு நிரந்தர வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்றும், மாநிலங்களின் நிதி சுதந்திரம், கூட்டாட்சி முறை போன்றவற்றை மீறுவதாக உள்ளதால் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்க்கிறோம் என்றார்.

வருமான வரி தாக்கல்

இலவசமாக வருமான வரி தாக்கல் செய்ய ஒன் ஸ்டாப் சொல்யூஷன்

 

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+