மும்பை: அமெரிக்க சந்தையின் விவசாயம் இல்லாத துறைகளில் வேலைவாய்ப்பு வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில் சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கையின் மீது நம்பிக்கை வைத்து அதிகளவில் இந்திய பங்குச்சந்தையில் செய்தனர்.
இதற்கு சாதகமாக ஹாங்காங், சீனா, ஜாப்பான் நாட்டு சந்தைகள் இருந்த நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 390 புள்ளிகள் வரை உயர்ந்தது.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் வங்கி மற்றும் மெட்டல் நிறுவனங்களில் அதிகளவிலான முதலீட்டை பெற்று தொடர்ந்து உயர்ந்த நிலையில் வர்த்தக சந்தை இருந்தது.
இன்றைய வர்த்தக சந்தை முடியும் முன்னர் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, 2017ஆம் ஏப்ரல் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி கண்டிப்பாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என நாடாளுமன்ற கூட்டத்தில் தெரிவித்தார். இதனால் மதியம் 3.00 மணி முதல் சென்செக்ஸ் அதிகளவில் உயர்ந்தது.
வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 363.98 புள்ளிகள் உயர்ந்து 28,078.35 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 132.05 புள்ளிகள் உயர்ந்து 8,683.15 புள்ளிகள் வரை உயர்ந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications