மும்பை: அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் உள்ளதை உறுதி செய்த வேலைவாய்ப்பு அறிக்கை ஆசிய சந்தையை இன்று லாபகரமான வர்த்தக நிலைக்கு கொண்டு சென்றது.
இந்திய வர்த்தக சந்தைக்கு ஆசிய மற்றும் அமெரிக்க சந்தைகள் சாதகமாக இருந்த நிலையில் ஜிஎஸ்டி குறித்த எதிரொலிகள் சந்தையை தொடர்ந்து விழிப்புடண் வைத்துள்ளது. இதன் காரணமாக திங்கட்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் வரை உயர்ந்தது.

வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 104.22 புள்ளிகள் உயர்ந்து 28,182.57 புள்ளிகளை எட்டியது.
இதேபோல் தொடர் வர்த்தக உயர்வை சந்தித்த நிஃப்டி குறியீடு 28.20 புள்ளிகள் உயர்ந்து 8,711.35 புள்ளிகளை அடைந்தது திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பார்தி ஏர்டெல், சன் பார்மா, என்டிபிசி, ஐடிசி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications