மும்பை: ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கையில் ரெப்போ விகிதத்தைக் கணிசமாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நுகர்வோர் பணவீக்கம் மற்றும் சில்லறை பணவீக்கத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தைக் குறைக்க மறுத்துவிட்டது ஆர்பிஐ.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை இன்று 150 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களைப் பதம் பார்த்தது.

பணவீக்கத்தைக் குறைப்பதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஆர்பிஐ மத்திய அரசு திட்டங்கள் மூலம் வளர்ச்சி அடையத் தகுந்த வாய்ப்புகள் அளிக்கவில்லை என்பதும் பல தரப்பினரின் முக்கியக் குற்றச்சாட்டாக இருந்தாலும், ரிசர்வ் வங்கி தனது திட்டத்தில் உறதியாக உள்ளது.
இதனால் 150 புள்ளிகள் வரை சரிந்த மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 97.41 புள்ளிகள் சரிந்து 28,085.16 புள்ளிகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 33.10 புள்ளிகள் வரை சரிந்து 8,678.25 புள்ளிகளை அடைந்தது.


Click it and Unblock the Notifications