மும்பை: தொடர்ந்து 2வது நாளாக இன்றும் மும்பை பங்குச்சந்தை சரிந்துள்ளது. புதன்கிழமை வர்த்தகம் துவக்கம் முதலே சரிவை பாதையில் செல்ல துவங்கிய சென்செக்ஸ் 325 புள்ளிகள் வரை சரிந்தது. லூப்பின் நிறுவனத்தின் மோசமான வருவாய் நிலை பங்குச்சந்தை சரிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
லூப்பின் நிறுவனத்தின் வருவாய் அளவுகள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில், பார்மா துறை நிறுவனங்களின் மீதான முதலீடு அதிகளவில் வெளியேறியது.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தை புதிய உச்சத்தை எட்டும் நிலைக்கு வந்ததால் ஆசியா மற்றும் ஜப்பான் சந்தைகள் கணிசமாகப் பாதித்தது.
மேலும் அமெரிக்க உற்பத்தி அறிக்கைக்காகக் காத்துக்கிடக்கும் அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இத்தருணத்தில் அமெரிக்காவில் உற்பத்தி அளவுகளும் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்த அதிகரித்து வருகிறது.
இதனால் அன்னிய முதலீட்டாளர்கள் இன்று இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீட்டைக் குறைந்துள்ளனர்.

புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 310.28 புள்ளிகள் குறைந்து 27,774.88 புள்ளிகள் வரை சரிந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலேவே நிஃப்டி குறியீடும் இன்று அதிகளவிலான சரிவை சந்தித்தது. இன்றைய வர்த்தகத்தில் 102.95 புள்ளிகள் சரிந்து 8,575.30 புள்ளிகளை அடைந்து புதன்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications