சென்னை: மத்திய அரசு 2017, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி-ஐ செயல்படுத்த உள்ளது.
ஜிஎஸ்டி என்னும் ஒன்றுபட்ட வரி அமைப்பின் மூலம் இந்தியாவில் தொழிற்துறை மற்றும் வர்த்தகச் சந்தை மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்.
அதுமட்டும் அல்லாமல் இந்திய ஜிடிபி அளவு 2 இலக்க உயர்வை எட்டும் எனக் காட்ரிஜ் குழுமத்தின் தலைவர் ஆதி காட்ரிஜ் ஜிஎஸ்டி மசோதா பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடும்.. ஜிஎஸ்டியும்..
பெரும் உற்பத்தி மாநிலமான தமிழ்நாடு ஜிஎஸ்டி மசோதா அமலாக்கத்தினால் உற்பத்தியாளர்கள் அதிக பயன்பெறுவார்கள் என்றாலும் அரசின் வருவாய் குறைந்துவிடும் என்று அஞ்சுகிறது.
இதன் காரணமாகவே கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து மத்திய அரசிடம் காட்டி வருகிறது.
கருத்துக்கணிப்பு
எனவே, ஜிஎஸ்டி மசோதாவினால் தமிழ்நாட்டு வியாபாரிகளுக்கு நஷ்டமா, லாபமா? என்று கருத்து கேட்டு இருந்தோம்.
இந்த கருத்துக்கணிப்பில் 700-க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்
ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசுக்கு மட்டுமே லாபம், தமிழ்நாட்டு வியாபாரிகளுக்கு நஷ்டம் என்று வாசகர்கள் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசுக்குத் தான் லாபம்
ஜிஎஸ்டி வரியினால் மத்திய அரசுக்கு மட்டுமே லாபம் என்று 40 சதவீதத்தினர் அதாவது 297 வாக்குகள் அளித்துள்ளனர்.
வியாபாரிகளுக்கு லாபமே
தமிழக வியாபாரிகளுக்கு லாபமே என்று 23% சதஈதத்தினர், அதாவது 168 வாக்குகள் அளித்துள்ளனர்.
வியாபாரிகளுக்கு நட்டம் மட்டும் தான்
தமிழக வியாபாரிகளுக்கு நட்டம் மட்டும் தான் என்று 13% அதாவது 97 வாக்குகள் அளித்துள்ளனர்.
லாபம் வரும் வரை காத்திருப்போம்
25 சதவீதத்தினர் அதாவது 185 வாக்குகள் லாபம் வரும் வரை காத்திருப்போம் என்று கருத்தளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications