மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியின் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவுகளில் லாபத்தில் 31.7 சதவீதம் சரிவைக் கண்டாலும், வராக் கடன் அளவு சந்தை கணிப்புகளை விடக் குறைவாக இருந்ததால் மும்பை பங்குச்சந்தையில் 8 சதவீத உயர்வைச் சந்தித்தது.
இதனுடன் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தை வர்த்தகம் இந்திய சந்தைக்குச் சாதகமாக அமைந்துள்ளதால், இந்திய பங்குச்சந்தையில் இன்று அதிகளவிலான முதலீடு குவிந்தது.

இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று ஒரே நாளில் 300 புள்ளிகள் உயர்ந்து 28,000 புள்ளிகளை மீண்டும் எட்டிப்பிடித்தது சென்செக்ஸ்.
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 292.80 புள்ளிகள் உயர்ந்து 28,152.40 புள்ளிகளை எட்டியது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 80.00 புள்ளிகள் உயர்ந்து 8,672.15 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications