60 சதவீத லாப சரிவில் பாங்க் ஆஃப் பரோடா
மும்பை: 2016ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டு முடிவில் நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஜுன் 30ஆம் தேதி முடிவில் வெறும் 424 கோடி ரூபாயை மட்டுமே லாபமாகப் பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் இவ்வங்கியின் லாப அளவு 60 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுமட்டும் அல்லாமல் பாங்க் ஆஃப் பரோடா-வின் வராக் கடன் அளவு 3 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இவ்வங்கியின் லாப அளவு 1,052 கோடி ரூபாய் இருந்த நிலையில், தற்போது 60 சதவீதம் குறைந்து 424 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதேபோல் 568 கோடி ரூபாயாக இருந்த வராக் கடன் அளவு தற்போது 1,986 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வட்டியில்லாத வருமானத்தின் அளவு 557 கோடி ரூபாயில் இருந்து 50 சதவீதம் உயர்ந்து 1,444 கோடி ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications