கோயம்புத்தூர்: இந்தியா பாகிஸ்தான் மத்தியிலான நட்புறவும் மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும், பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய மண்ணில் விளையும் பருத்தி மீது ஆர்வம் அதிகம்.
இந்தியாவிடம் இருந்து அதிகளவிலான பருத்தி பொருட்களை வாங்கும் டாப் 10 நாடுகளில் பாகிஸ்தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
2015-16ஆம் நிதியாண்டில் மொத்த பருத்தி ஏற்றுமதியில் 40 சதவீதம் பாகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
25 லட்சம் பேல்
2015-16ஆம் நிதியாண்டில் (அக்டோபர்-செப்டம்பர்) காலத்தில் இந்தியா உலக நாடுகளுக்குச் செய்த மொத்த பருத்தி வர்த்தகத்தில் 40 சதவீதம் பாகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாத காலத்தில் சுமார் 25 லட்சம் பேல் பருத்தி பாகிஸ்தான் நாட்டிற்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 1பேல் 170 கிலோ.
மொத்த வர்த்தகம்
2015-16ஆம் நிதியாண்டு காலத்தில் 65 லட்சம் பேல் பருத்தி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என இந்திய பருத்தி அமைப்பின் தலைவர் ஜே. துளசிதரன் வர்த்தக அறிக்கையை வெளியிடும் போது செய்தியாளர்களிடம் கூறினார்.
உற்பத்தி சரிவு
பாகிஸ்தான் நாட்டில் இக்காலகட்டத்தில் பருத்தி உற்பத்தி அதிகளவில் குறைந்துள்ளதால் அதன் தேவைக்கு இந்தியா ஈடுசெய்துள்ளது என்று இந்திய பருத்தி அமைப்பின் செயலாளர் அத்துல் ஜே அஸ்ஷர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
பாகிஸ்தான்
2015-16ஆம் ஆண்டில் இந்நாட்டில் பருத்தி உற்பத்தி 35 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த உற்பத்தி அளவில் 97 லட்சம் பேல் பருத்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பொதுவாகப் பாகிஸ்தான் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் பேல் பருத்தி தான் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் இறக்குமதி செய்யும்.
உற்பத்தியில் இந்தியா டாப்பு
உலகளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா தான் முதல் இடம். 2015-16ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 338 லட்சம் பேல் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
விலை நிலவரம்
பாகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் போது இந்தியாவில் ஒரு பேல் பருத்தி 34,000 ரூபாய். ஆனால் தற்போது இதன் விலை 50,000 ரூபாய்.
ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பருத்தி விலை 48,000 ரூபாய்.
சீனா
கடந்த நிதியாண்டுகளில் இந்தியாவில் இருந்து அதிகளவில் பருத்து இறக்குமதி செய்யப்பட்ட நாடுகளில் சீனா முதல் இடத்தில் இருந்தது.
More From GoodReturns

துரந்தர் படத்தின் வசூலில் பங்கு கேட்கும் பாகிஸ்தான் மக்கள்!! இதென்ன புது பிரச்சினை!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications