புது டெல்லி: தங்கம் மீதான தேவை அதிகரித்திருப்பதை அடுத்து ஐந்தாவது முறையாகத் தங்க பத்திரங்கள் அடுத்த மாதம் விநியோகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Check gold rates in Chennai here
ஐந்தாவது முறையாகத் தங்க பத்திரங்கள்
தங்கம் பத்திரங்கள் மீதான கவர்ச்சியை அதிகரிக்க சில மாற்றங்கள் செய்வதற்கான பணியில் இறங்கி உள்ளதாகவும், ஐந்தாவது முறையாகத் தங்க பத்திரங்கள் செப்டம்பர் மாதம் விநியோகிக்கப்படும் என்றும் மூத்த மத்திய நிதி அமைச்சக அதிகாரி கூறினார்.
நான்காவது முறை
சென்ற முறை தங்க பத்திரங்கள் மீது சில மாற்றங்களைக் கொண்டு வந்ததாகவும் அது நல்ல சாதகமான முடிவை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த மாதம் வெளியிட்ட தங்க பத்திரங்கள் வாயிலாக ரூ.919 கோடி திரட்டப்பட்டதாகவும் இதுவரை இதுவே அதிகபட்சம் ஆகும் என்றும் தெரிவித்தார்.
இரண்டாம் இடம்
அதற்கு முன்பு வரை ரூ.746 கோடி தங்க பத்திரமாகத் திரட்டியதே அதிகமாக இருந்து ஆனால் இது தற்போது இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
துவக்கம்
2015-16 நிதி ஆண்டில் நேரடி தங்கம் வாங்குவதற்கு மாற்றுத் திட்டமாக சவரன் தங்க பத்திரத் திட்டம் துவங்கப்பட்டது.
2.75 சதவீதம் நிலையான வட்டி
ஆரம்ப முதலீடு அளவைப் பொறுத்து வருடத்திற்கு 2.75 சதவீதம் நிலையான வட்டி விகிதத்தில் இந்தப் பத்திரங்கள் மூலம் வட்டி கிடைக்கும்.
இந்த முதலீட்டுப் பத்திரத்தின் முதிர்ச்சி காலத்தின் கடைசி ஆண்டைத் தவிர மற்ற எல்லா ஆண்டுகளுக்கும், ஆறு மாத்திற்கு ஒருமுறை முதலீடு செய்பவரின் கணக்கில் சேர்க்கப்படும், கடைசி ஆண்டின் வட்டி மட்டும் முதிர்ச்சி காலம் முடியும் போது அசலுடன் சேர்த்து வட்டி தொகையும் திரும்பப் பெறலாம்.
என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ
பத்திரங்கள் டிமேட் மற்றும் பேப்பர் பத்திரங்கள் என இரண்டு விதமாகவும் கிடைக்கும்.
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை இரண்டிலும் கூடுதலாக முதலீடுகளைப் பெறுவதற்கான தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!



Click it and Unblock the Notifications