உங்கள் விலை மதிப்புள்ள பொருட்கள், ஆவணங்கள் போன்றவற்றை வங்கி லாக்கர்களில் வைப்பது பாதுகாப்பானது. ஆனால் லாக்கரை வாடகைக்கு எடுக்க மற்றும் தேவைப்படும் போது திறந்து பார்க்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான வங்கிகளில் வருடத்திற்கு 12 முறை வரை இலவசமாக லாக்கரை திறந்து பார்க்க அனுமதிக்கப்படுகிறது. இந்த வரம்பைத் தாண்டும் போது கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களுடன் நட்புறவை அதிகரிக்க முன்பு வருடத்திற்கு 12 முறை இலவசமாக தங்கள் லாக்கரை பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்ததை வரம்பற்ற முறையில் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம் என்று பஞ்சாப் நேஷ்னல் வங்கி அறிவித்துள்ளது.
சென்ற மாதம் வரை வருடத்திற்கு 12 முறைக்கு மேல் லாக்கரை திறக்க விரும்புவோருக்கு ஒரு முறை திறந்து பார்க்க ரூ.50 கட்டணமாக வசூலித்து வந்தது. பெரும்பாலான தேசிய வங்கிகளில் இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி லாக்கர் கட்டணத்தை முழுவதுமாக மாற்றியுள்ளது.
இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், நட்புறவை அதிகரிக்க உதவுவதாகவும் மற்றும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் உள்ளதாக வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் லாக்கர் செயல்பாட்டு வழிமுறைகளின் படி அதிக ஆபத்து லாக்கர் வாடிக்கையாளர்கள் வருடத்திற்குக் குறைந்தது ஒரு முறையும், நடுத்தர ஆபத்து லாக்கர் வாடிக்கையாளர்கள் மூன்று வருடத்திற்கு ஒரு முறையும் கண்டிப்பாக திறந்து பார்க்க வேண்டும்.
அவ்வாறு பார்க்கவில்லை எனில் சில காலங்களில் லாக்கர்களை நிறுவனம் உடைத்துத் திறந்து விடும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications