மும்பை: அமெரிக்க நாட்டின் மத்திய வங்கியான பெடரல் வங்கியின் தலைவர் ஜேனட் யெல்லென், ஜாக்சன் ஹோல் மாநாட்டில் 2016ஆம் ஆண்டுக்குள் ஒரு முறையாவது வட்டி உயர்த்து சூழ்நிலை உருவாகும் எனத் தெரிவித்தார்.
இதனால் வியாழக்கிழமை வர்த்தகத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மிகவும் குறைவான அளவிலேயே இந்திய சந்தையில் முதலீடு செய்தனர். இதன் காரணமாகக் காலை வர்த்தகத்தில் கணிசமான வர்த்தகத்தைக் கண்டது மும்பை பங்குச்சந்தை.

இதனுடன் ஆகஸ்ட் மாத ஆடர்கள் இன்று முடிவடைவதால் வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 230 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்தது.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 224.03 புள்ளிகள் குறைந்து 27,835.91 புள்ளிகள் எட்டிய 28,000 புள்ளிகள் என்ற நிலையை இழந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 58.10 புள்ளிகள் சரிந்து 8,592.20 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications