மும்பை: இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் இன்று முதலீட்டாளர்கள் ப்ளூ சிப் பங்குகள் மீது அதிகளவிலான முதலீடு செய்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு நிலையான வர்த்தகத்தைப் பெற்று லாபகரமான நிலையில் முடிவடைந்தது.
அதேபோல் இன்று மாலையில் வெளியாக உள்ள பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கை அன்னிய முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்த்தது.

இதன் எதிரொலியாக ஐரோப்பிய சந்தை வர்த்தகத் துவக்கத்தில் அன்னிய முதலீட்டு அளவு கணிசமாக அதிகரித்துக் காணப்பட்டது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 109.16 புள்ளிகள் உயர்ந்து 28,452.17 புள்ளிகளை எட்டியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் மதிய நேர வர்த்தகத்தில் கணிசமான வர்த்தக உயர்வைச் சந்தித்து 41.85 புள்ளிகள் உயர்ந்து 8,786.20 புள்ளிகளை அடைந்து புதன்கிழமை வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications