மும்பை: அமெரிக்க பெடரல் வங்கியின் தொடர் ஆய்வுகள் மூலம் தனது வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் 546 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்து முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.
பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்ந்தினால் சர்வதேச சந்தைய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருக்கும் தனது முதலீட்டை அமெரிக்க கடன் சந்தையில் முதலீடு செய்வார்கள்.
திங்கட்கிழமை மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கி சில மணிநேரங்களில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் அனைத்து துறைவாரியான வீழ்ச்சிக்கு வழிவகுத்து சென்செக்ஸ் குறியீடு 546 புள்ளிகள் வரை சரிந்தது.
அதுமட்டும் அல்லாமல் இன்று மாலை வெளியாக இருக்கும் ஜூலை மாத தொழிற்துறை உற்பத்தி தரவுகள், ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கமும் அதிர்வுகளுக்கு பெடரல் வங்கி அறிவிப்பில் மறைந்து போனது.
இன்று 12மணி அளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 384.53 புள்ளிகள் சரிந்து 28,412.72 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 129.70 புள்ளிகள் சரிந்து 8,737.00 புள்ளிகள் சரிந்துள்ளது.
சர்வதேச சந்தை தாக்கத்தின் மூலம் இந்திய பங்குச்சந்தை தொடர்ந்த சரிவு பாதையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் குறியீட்டின் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ், விப்ரோ, ரிலையன்ஸ், டிசிஎஸ், ஆகிய 4 நிறுனங்களை தவிர பிற அனைத்தும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதில் டாடா ஸ்டீல் நிறுவனம் 3.66 சதவீதம் சரிந்துள்ளது.
பிரெக்ஸிட் பிரிவிற்கு பின் இந்திய பங்குச்சந்தை சந்திக்கும் மிகப்பெரிய சரிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications