ஒரே நாளில் 443 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்..!

அமெரிக்கா பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக என அறிவிக்கப்பட்டதால் சர்வதேச சந்தையில் பங்குச்சந்தை வர்த்தகம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

இன்று காலை வர்த்தகத்தில் 546 புள்ளிகள் சரிவை சந்தித்த சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 443 புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது.

அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குதல் குறைவாக உள்ளதால் பெடரல் வங்கியின் அடுத்த நாணய கொள்கையில் வட்டி விகிதத்தை உயர்த்தாது சில நாட்களுக்கு முன் வெளியான அறிவிப்பின் மூலம் திங்கட்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகளவிலான உயர்வைக் கண்டது.

ஒரே நாளில் 443 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்..!

ஆனால் சில ஆய்வுகளுக்குப் பின் பெடரல் வங்கி தனது நாணய கொள்கை மறுஆய்வு கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாகச் சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் நிலையான மற்றும் பாதுகாப்பான முதலீட்டில் லாபத்தைப் பெறுவதற்காகப் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீட்டைப் பங்கு விற்பனையின் மூலம் அதிகளவில் குறைந்து அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்யத் தயாராகினர்.

ஒரே நாளில் 443 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்..!

இதனால் ஆசிய சந்தை, ஐரோப்பிய சந்தை என அனைத்து முக்கிய வர்த்தகச் சந்தைகளும் பாதித்தது.

திங்கட்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 443.71 புள்ளிகள் சரிந்து 28,353.54 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 151.10 புள்ளிகள் குறைந்து 8,715.60 புள்ளிகள் வரை சரிந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+