ஜிஎஸ்டி திட்டத்தில் 60% வேலையை முடித்துவிட்டோம்.. வெற்றிப்பாதையில் 'இன்போசிஸ்'..!

டெல்லி: இந்திய வரியமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் சரக்கு மற்றும் சேவை வரியை அமலாக்கம் செய்ய வன்பொருள் மற்றும் மென்பொருள் வடிவமைப்பு பணிகளை நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் ஏற்று நடத்தி வருகிறது.

இதற்காக இன்போசிஸ் மற்றும் அரசு தரப்பு 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா ஒப்புதல் பெற பல மாதங்கள் பின்னடைந்த நிலையிலும் இன்போசிஸ் ஜிஎஸ்டி வரி அமைப்புக்கான மென்பொருள் வடிவமைப்பு பணிகளில் சுமார் 60 சதவீத பணிகளை முடித்துள்ளது.

இதுக்குறித்து சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க்-இன் தலைவர் நவீன் குமார் என்ன சொல்கிறார்..?

வன்பொருள்

வன்பொருள்

ஜிஎஸ்டி வரியமைப்பு வடிவமைப்பு திட்டத்தின் படி 2015ஆம் ஆண்டு இறுதியில் வன்பொருள் பெறுவதற்கான ஆர்டர் செய்யப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் நாடாளுமன்றத்தில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் பெற காலதாமதம் ஆன நிலையில், 2016ஆம் ஆகஸ்ட் மாதத்தில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2017இல் ஜிஎஸ்டி

ஏப்ரல் 2017இல் ஜிஎஸ்டி

இத்திட்டத்தின் படி 7 மாதம் பின்தங்கியிருந்தாலும் ஏப்ரல் 2017ஆம் ஆண்டு முதல் ஜிஎஸ்டி திட்டம் முழுமையாகச் செயல்பட துவங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க்-இன் தலைவர் நவீன் குமார்.

ஆனால் இன்னமும் ராஜிய சபா ஜிஎஸ்டி வரியமைப்பில் முக்கிய மாற்றங்களைச் செய்து வருவதால், சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் தலைமையிலான குழு மென்பொருள் வடிவமைப்பில் முழுமையாக இறங்கியுள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது எனவும் நவீன் குமார் குறிப்பிட்டார்.

 

 2016 டிசம்பர் மாத

2016 டிசம்பர் மாத

மேலும் வன்பொருள்ட்கள் அனைத்தும் ஆகஸ்ட் மாதம் ஆர்டர் செய்யப்பட்ட நிலையில் 2016 டிசம்பர் மாதத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்டு முழுமையாக நிறுவி சோதனை செய்து முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதனுள் மென்பொருள் வடிவமைப்பு மற்றும் சேதனைகள் என அனைத்தும் முடிந்துவிடும்.

பீட்டா வெர்ஷன்

பீட்டா வெர்ஷன்

2017ஆம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதத்திற்குள் ஜிஎஸ்டி மென்பொருளில் பீட்டா வெர்ஷன் வெளியிட்டு முழுமையான அமலாக்தத்திற்கு செயல்படுத்தப்படும்.

இதன் பின் 2017 ஏப்ரல் மாதத்தில் முழுமையான செயலாக்கத்தில் ஜிஎஸ்டி இயங்கும். இதுவே எங்களது செயல்விடிவம் இதற்காக நாங்கள் 100 சதவீதம் தயாராகவும் உறுதியாகவும் இருக்கிறோம் என்றும் சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க்-இன் தலைவர் நவீன் குமார் பிஸ்னஸ்லைன் செய்தி நிறுவனத்திற்கு அளிக்க பேட்டியில் கூறினார்.

 

80 லட்சம் பேர்

80 லட்சம் பேர்

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு வந்தால் 2017 அக்டோபர் மாதத்திற்குள் மதிப்பு கூட்டு வரி, சேவை வரி, மத்திய கலால் வரி செலுத்தும் சுமார் 80 லட்ச வரி செலுத்துவோர் சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க்-இல் இணைக்கப்படுவார்கள்.

மேலும் அவர்களுக்கு லாக்இன் ஐடி மற்றும் கடவுச் சொல் அளிக்கப்படும்.

 

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் மற்றும் மத்திய அரசுக்கு நடத்த சமீபத்திய கூட்டத்தில் மாநில அரசுகளின் மீது விதிக்கப்படும் வட்டி விகிதம் குறித்து விவாதிக்கப்பட்டது.

காலம் தாழ்த்தி வரியை செலுத்தும் மாநில அரசுகளுக்கு 12 சதவீத வட்டி விதிக்க திட்டமிட்டுடோம். ஆனால் மத்திய அரசு, மாநில அரசிடம் மத்திய அரசு 9 சதவீத வட்டியில் கடன் வாங்கும் நிலையில், கூடுதல் வரியை நாம் விதிக்கக் கூடாது எனத் தெரிவித்தது.

 

3 மாத காலம்

3 மாத காலம்

சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க்-இன் பரிந்துரையின் படி மென்பொருள் வடிவமைப்பில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த இன்போசிஸ் தற்போது ஈட்டுப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் முழுமையான மாற்றங்கள் செய்த பிறக்கு குறைந்தது 3 மாதங்கள் காலம் வேண்டும் அப்போது தான் நிலையான மற்றும் உறுதியான மென்பொருள் செயல்பாட்டை நாங்கள் அளிக்க முடியும் என இன்போசிஸ் இந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ளது.

 

டிசம்பர் மாதம்

டிசம்பர் மாதம்

இதனால் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து அனைத்து முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

550 கோடி ரூபாய்

550 கோடி ரூபாய்

1,380 கோடி ரூபாய் மதிப்புடைய இந்தி ஜிஎஸ்டிஎன் திட்டத்தில் 550 கோடி ரூபாய் மத்திய அரசு இன்போசிஸ் நிறுவனத்திற்கு அளித்துள்ளது. எஞ்சியுள்ள தொகையை சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் அரசு வங்கிகள் அல்லது நிறுவனங்களிடம் கடன் பெறுமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தெறித்து ஓடும் ஐடி நிறுவனங்கள்

தெறித்து ஓடும் ஐடி நிறுவனங்கள்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+