அமெரிக்க மத்திய வங்கியான பெரடல் ரிசர்வ் லேபர் சந்தையைக் கருத்தில் கொண்டு நாணய கொள்கை கூட்டத்தில் தனது வட்டி விகிதத்தை மாற்றவில்லை.
ஆனால் 2016ஆம் ஆண்டுக்குள் கண்டிப்பாக லேபர் சந்தை உயர்வின் போது தனது வட்டி விகிதத்தை உயர்த்த உறுதியாக உள்ளது என்பதையும் குறித்து வெளியிட்டது.
2016ஆம் ஆண்டு துவக்கத்தில் குறைந்தது 4 முறை தனது வட்டி விகிதத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்த பெடரல் ரிசர்வ் இதுவரை ஒரு முறை கூட உயர்த்தவில்லை.

பெடரல் ரிசர்வ்-இன் அறிவிப்புகளைத் தொடர்ந்து ஆசியா மற்றும் ஐரோப்பா சந்தைகளை சிறப்பான வர்த்தகத்தை அடைந்தது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை வியாழக்கிழமை நிலையான வர்த்தகத்தைப் பெற்று 400 புள்ளிகள் வரை உயர்ந்தது.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 265.71 புள்ளிகள் உயர்ந்து 28,773.13 எட்டியது. இதேபோல் நிஃப்டி குறியீடு 90.30 புள்ளிகள் உயர்ந்து 8,867.45 புள்ளிகள் அடைந்து வர்த்தக சந்தை முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications