மும்பை: காஷ்மீர் மாநிலம், யூரியில் தூங்கிக்கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பொங்கியெழுந்த இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் புகுந்து விமானங்கள் மூலம் குண்டு மழை பொழித்துத் தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதிகள் பலர் கொன்று குவிக்கப்பட்டதாக இந்திய ராணுவ உயர் அதிகாரி ரன்பீர் சிங் தெரிவித்தார்.
ரன்பீர் சிங் அவர்களின் அறிவிப்பு வெளியான அடுத்தச் சில நொடிகளில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 550 புள்ளிகள் வரை சரிந்தது.
சந்தை நிலவரம்
பொதுவாக ஏந்தொரு நாட்டில் புரட்சி, போர் விளைந்தாலும் பங்குச்சந்தை தரையைத் தட்டுவது இயல்பு தான். காரணம் சர்வதேச சந்தையில் அதிகளவில் முதலீடு செய்திருப்பது அன்னிய முதலீட்டாளர்கள் தான். போர் மற்றும் புரட்சி ஏதேனும் வெடித்தால் முதலில் பயந்து ஓடுவது அன்னிய முதலீட்டாளர்கள் தான். இதன் வெளிப்பாடே இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம்.
கச்சா எண்ணெய்
வியாழக்கிழமை காலை வர்த்தகத்திலேயே கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு பற்றி OPEC அமைப்பின் அறிவிப்பால் கணிசமான வர்த்தகத்தை மட்டுமே பெற்று வந்தது.
இந்திய ராணுவ தாக்குதல்
இதன் பின் மதியம் 12.45 மணிக்கு இந்திய ராணுவ தாக்குதல் குறித்து வெளியான அறிவிப்பை அடுத்து மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 550 புள்ளிகளும், நிஃப்டி குறியீடு 180 புள்ளிகள் வரையும் சரிந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
1.15 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 357.64 புள்ளிகள் சரிந்து, 27,912.17 புள்ளிகளும், நிஃப்டி குறியீடு 110.50 புள்ளிகள் சரிந்து 8,634.65 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
ஆனால் 1 மணிநேர முன்பு வர்த்தகத்தை ஒப்பிடுகையில் மும்பை பங்குச்சந்தை மேம்பட்டு வருகிறது.
17 ஆண்டுகளுக்கு பின்
கார்கில் போரை அடுத்து யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா 17 ஆண்டுகள் கழித்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பதில் தாக்குதல்
யூரி தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடி இதுவாகும். இந்த தாக்குதலில் அதிர்ச்சியடைந்துள்ள பாகிஸ்தான், இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் அனைத்தையும் எதிர்கொள்ள உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
நவாஸ் ஷெரீப்
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, எங்களுக்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம் என்றும் ஆனால் அதை எங்கள் பலவீனமாக கருதக்கூடாது என்று நவாஸ் ஷெரீப் கூறியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பாகிஸ்தான் மக்களை காப்பாற்ற, பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்த தயங்காது என்றும் நவாஸ் ஷெரீப் கூறினார் என்று பாகிஸ்தான் செய்திகல் கூறுகிறது.
குற்றம்சாட்டு
இந்திய ராணுவம் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், அது பாகிஸ்தான் ராணுவத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் எனவும், நவாஸ் ஷெரிப் குற்றம்சாட்டியுள்ளார்.
அபாயம்..!
பயப்படத் தேவையில்லை..
பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படையின் தாக்குதல் குறித்துச் செய்திகள் வெளிந்தால் அதிர்த்திச்சியில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை பாதுகாத்துக்கொள்ள வெளியேற்றி வருகின்றனர். ஆனால் அடுத்தச் சில நாட்களில் இந்திய பங்குச்சந்தையில் நிலையான வர்த்தகத்தையும் அடையும் என்பது உறுதி என் டால்டன் கேபிடல் அட்வைசர்ஸ் நிறுவன தலைவர் யூ.ஆர். பாத் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாத ஆர்டர்கள்
மேலும் செப்டம்பர் மாதத்திற்கான ஆர்டர்கள் இன்று முடிவடைவதால் சென்செக்ஸ் குறியீட்டின் மாலை நேர வர்த்தகத்தில் அதிகளவிலான பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாலர் ரூபாய்
இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.90 ரூபாயாக உள்ளது.
டாப் 30 நிறுவனங்கள்
2.35 மணிநேரத்தில் மும்பை பங்குச்சந்தையில் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டிசிஎஸ், ஒஎன்ஜிசி நிறுவனத்தைத் தவிர அனைத்து நிறுவனங்களும் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
இதிலும் முக்கியமாக ஐசிஐசிஐ வங்கி 5.48 சதவீதம் வரை சரிந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதானி போர்ஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, லூப்பின், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகியலவை 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

துரந்தர் படத்தின் வசூலில் பங்கு கேட்கும் பாகிஸ்தான் மக்கள்!! இதென்ன புது பிரச்சினை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications