முதலீட்டாளர்களுக்குத் தங்கமும், வெள்ளியும் எந்த வருடமும் இல்லாத அளவுக்குப் பங்கு சந்தைகளை விட இந்த வருடம் 28 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது.
2016 அக்டோபர் 10 ஆம் தேதி வரை தங்கம் மற்றும் வெள்ளியின் விலை 19.77 சதவீதமும், 28.37 சதவீதமும் அதிகரித்துள்ளது.
பங்குச் சந்தையின் நிலை
இன்னொரு பக்கம் 30 பங்குகளின் விலை எவ்வளவு உயர்ந்து இருக்கிறது என்பதைப் பார்த்தால் 7.52 சதவீதம் மட்டுமே. 2016 செப்டம்பர் 8 வரை 52 வார உச்சத்தை அடைந்துள்ள சென்செக்ஸ் குறியீடு 29,077.28 புள்ளிகளை அடைந்துள்ளது.
ஆனால் 2015 மார்ச் 4 ஆம் தேதி அடைந்த உச்சபட்ச உயர்வான 30,024.74 புள்ளிகளை விட இது குறைவானது. அதனுடன் ஒப்பிடும் போது தற்போதைய நிலை 1,942.4 புள்ளிகள் குறைந்துள்ளன, இது 6.46 சதவீதம் குறைவாகும்.
தங்கம் வெள்ளியின் விலை
2015 டிசம்பர் 31 ஆம் தேதி 25,390 ரூபாயாக இருந்த 10 கிராம் தங்கத்தின் விலை 30,410 ரூபாயாக உயர்த்துள்ளது. அதே சமயம் 33,300 ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளியின் விலை 42,750 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சந்தையின் நிலவரம்
சந்தையின் நிலவரத்தின் படி பிற சொத்துக்களை விட முதலீட்டாளர்களுக்குத் தங்கம் நல்ல லாபத்தை அளித்ததுடன் பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த 15 வருடங்களில் 12 வருடங்கள் தங்கம் அதிக லாபம் அளித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
2015 மற்றும் 2014
என்ன தான் தங்கமும், பங்குச் சந்தையும் இந்த வருடம் நல்ல லாபம் அளித்து வந்தாலும் சென்ற வருடம் நட்டத்தையே அளித்தது.
முதலீட்டாளர்களுக்கு 2014 ஆம் ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளியை விட பங்குச் சந்தை அதிக லாபம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications