அமெரிக்கப் பெடரல் வங்கியின் முடிவாலும், சீன சந்தையில் ஏற்பட்டுள்ள வர்த்தக வீழ்ச்சியாலும் இன்று இந்திய பங்குச்சந்தை தாறுமாறாகச் சரிந்து வருகிறது.
இன்று காலை 150 புள்ளிகளுடன் சரிவடைந்த சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாத்துக்கொள்ளத் தங்கம் மற்றும் வெள்ளி மீது முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
தங்கம் விலை
வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 2 ரூபாய் அதிகரத்து 2,840 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை 2 ரூபாய் அதிகரித்து 3,037 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வெள்ளியின் விலை
தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளியின் விலை கணிசமான அளவில் குறைந்துள்ளது. இன்று வர்த்தக சந்தையில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 150 ரூபாய் குறைந்து 42,435.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
நேற்றைய வர்த்தகம்
புதன்கிழமை வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 260 ரூபாய் வரை உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேரபோல் வெள்ளியின் விலை 160 ரூபாய் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகை
இந்தியாவில் மிக விமர்சியாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இம்மாத இறுதியில் கொண்டாடப்படுவதால் இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்காலக்கட்டத்தில் தங்கத்தின் விலை உயரவும் வாய்ப்புள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?



Click it and Unblock the Notifications