'ரத்தக்களறி' ஆன மும்பை பங்குச்சந்தை.. 500 புள்ளிகள் வரை சரிந்த 'சென்செக்ஸ்'..!

மும்பை: தசரா மற்றும் மொகரம் பண்டிகை விடுமுறைக்குப் பின் பங்குச் சந்தை வர்த்தகத்திற்கு வந்த முதலீட்டாளர்களுக்கு இன்றைய வர்த்தகம் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

அமெரிக்க வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்பு, அதிபர் தேர்தல், சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பு, ஆசிய சந்தையின் வீழ்ச்சி எனப் பல்வேறு காரணங்களுக்காக மும்பை பங்குச்சந்தை இன்று ரத்தக்களறி ஆனது.

பெடரல் வங்கி

பெடரல் வங்கி

அமெரிக்கப் பெடரல் வங்கி செப்டம்பர் 20-21ஆம் தேதிகளில் நடத்திய நாணய கொள்கை கூட்டத்தில் கண்டிப்பாக வட்டி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கூட்டத்தின் முடிவில் வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் வங்கி தனது முடிவை மாற்றிக்கொண்டது.

டிசம்பர் 2016

டிசம்பர் 2016

இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் கூட்டத்தில் கண்டிப்பாக வட்டி உயர்வும் இருக்கும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது நிலையில் சர்வதேச முதலீட்டாளர்கள் அமெரிக்கச் சந்தையை நோக்கிய செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அதிபர் தேர்தல்

அதிபர் தேர்தல்

மேலும் நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலின் தாக்கத்தைச் சமாளிக்கக் கூட இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கலாம் எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக எந்த ஒரு நாட்டில் தேர்தல் நடந்தாலும் இந்நாட்டின் பங்குச்சந்தை மற்றும் ரூபாய் மதிப்பு பாதிக்கப்படுவது இயல்பு.

 

சீனா

சீனா

உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் 2வது இடத்தில் இருக்கும் சீனா, ஏற்றுமதி வர்த்தகத்தில் அதிகளவிலான சரிவை சந்தித்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் இந்நாட்டில் தற்போது சுகாதாரப் பிரச்சனை மிகப்பெரிய உச்சத்தை அடைந்துள்ளது.

ஏற்றுமதி வர்த்தகம்

ஏற்றுமதி வர்த்தகம்

இத்தகைய மோசமான சூழ்நிலையில் சீனா பங்குச்சந்தை வர்த்தகம் கடந்த 3 வாரங்களாகச் சரிவை சந்தித்து வருகிறது. மேலும் ஏற்றுமதி வர்த்தகம் குறித்து வெளியான அறிவிப்புக்கள் இந்நாட்டின் சந்தையை அதிகளவில் பாதித்துள்ளது.

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்

அமெரிக்க நிறுவனங்கள் தங்களது ஐடி சேவையில் செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதால், தனது வருவாய் அளவு பாதிக்கப்படும் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு டிசிஎஸ் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளதால், இந்திய சந்தையில் மிகப்பெரிய சந்தை முதலீட்டைக் கொண்டுள்ள டிசிஎஸ் நிறுவனம் இன்று 2.17 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் இந்திய ஐடி நிறுவனங்களின் வர்த்தகம் இன்று பாதித்தது.

 

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

இத்தகைய மோசமான சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 150 புள்ளிகள் வரையிலான சரிவுடன் துவங்கியது.

இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைத் தொடர்ந்து குறைத்து வந்தனர்.

 

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 439.23 புள்ளிகள் சரிந்து 27,643.11 புள்ளிகளை அடைந்தது. எனவை 28,000 புள்ளிகள் என்ற ஸ்திரமான நிலையில் இருந்து சென்செக்ஸ் கவிழ்ந்துள்ளது.

டாப் 30 நிறுவனங்கள்

டாப் 30 நிறுவனங்கள்

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ், ஒன்ஜிசி, மாருதி, சிப்லா, ஹீரோ மோட்டோ கார்ப், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் மட்டுமே லாபத்தை அடைந்துள்ளது.

அதானி போர்ஸ், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, லூபின், டிசிஎஸ், பவர் கிரின்ட், சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான நஷ்டத்தைச் சந்தித்தது.

 

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று 135.45 புள்ளிகள் சரிந்து 8,573.35 புள்ளிகளை அடைந்து வியாழக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.

2 நாள் தொடர் விடுமுறைக்குப் பின் வர்த்தகச் சந்தைக்கு வந்த முதலீட்டாளர்களுக்கு இன்றைய வர்த்தகம் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+