மும்பை: இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் மற்றும் சில்லறை விலை பணவீக்கம் குறைந்ததால் காலையில் மந்தமாக இருந்த பங்குச்சந்தை வர்த்தகம் மாலையில் உயர்வடைந்தது.
இதன் படி வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 30.49 புள்ளிகள் உயர்ந்து 27,673.60 புள்ளியைத் தொட்டது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து 8,583.40 புள்ளிகள் அடைந்து இந்த வார வர்த்தகம் முடிவிற்கு வந்தது.

மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களின் பட்டியலில் கெயில், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், பவர் கிரன்ட், ஒஎன்ஜிசி, டிசிஎஸ், அதானி போர்ட்ஸ் ஆகியவை 1 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு லாபத்தைச் சந்தித்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகிய நிறுவனங்கள் 2.30 சதவீதம் அளவிற்குச் சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications