மும்பை: வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் நுகர்வோர் மற்றும் டெக் நிறுவனங்களின் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வருவதால் சென்செக்ஸ் குறியீடு அதிகளவிலான வளர்ச்சியைக் காண முடியவில்லை.
இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாபத்தில் மிகக் குறைவான வளர்ச்சி அடைந்த டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் மதியம் 1 மணியளவில் 0.57 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் வளர்ச்சி அளவைக் குறைத்துள்ளதால் இன்போடிஸ் நிறுவனப் பங்குகள் இன்று காலை 5 சதவீதம் வரை குறைந்து காணப்பட்டது.

1.15 மணி அளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 38.15 புள்ளிகள் உயர்வுடன் 27,681.26 புள்ளிகளை அடைந்துள்ளது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 9.50 புள்ளிகள் உயர்ந்து 8,582.85 புள்ளிகளை எட்டியுள்ளது.
மேலும் தென் இந்தியாவில் நிலவும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டைக் குறைக்க இந்திய ஈரான் நாட்டுடன் செய்த ஒப்பந்தத்தின் முதல் டெலிவரி கிடைக்க உள்ளது. இதனால் பங்குச்சந்தையில் ஒஎன்ஜிசி, கெயில், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தை அடைந்து வருகிறது.
Sensex trading flat; GAIL, ONGC stocks starts gaining


Click it and Unblock the Notifications