மும்பை: சமுக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனமும் இந்திய பிரீமியர் லீக் போட்டிகளை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பும் உரிமைக்காக இணைய உள்ளது.
இந்திய கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ நடத்தும் இந்த ஏலத்தில் ஏற்கனவே பல கார்ப்ரேட் நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போடும் நிலையில் இப்போது டிவிட்டரும் அதில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுப் பிரியர்களுக்காக நேரடி
இந்திய டிவிட்டர் நிறுவனத்தின் விளையாட்டுப் பிரிவு தலைவர் அனீஷ் மதானி இது பற்றி கூறுகையில் உலகம் முழுவதிலும் எங்களது வணிக வாய்ப்பை அதிகரித்து வரும் நோக்கில் விளையாட்டுப் பிரியர்களுக்காக நேரடியாகப் போட்டிகளை ஒளிபரப்பும் முயற்சிகளை செய்துவருகிறோம் என்று தெரிவித்தார்.
டிவிட்டர் நிறுவனம் ஏற்கனவே நைட் ஃபூட்பால் லைவ் என்னும் விளையாட்டு போட்டிக்கான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வைத்துள்ளது.
டிவிட்டர்: 2016 ஐபிஎல்
கிரிக்கெட் ரசிகர்கள் 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது உலகளவில் 10.6 மில்லியன் ட்விட்களை செய்துள்ளனர். இது 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது டிவிட் செய்ததை விட 56 சதவீதம் அதிகமாகும். ஐபிஎல் போட்டிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் அதில் நாங்களும் இணைந்து உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க முடிவு செய்துள்ளோம் என்றும் மதானி தெரிவித்தார்.
16 நிறுவனங்கள் போட்டி
தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் இணைதளத்தில் ஸ்டார் இந்தியா, சோனி பிக்ச்சர்ஸ் நிறுவனம் உட்பட ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமைக்கு 16 நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன என்று தெரிவித்து இருந்தோம்.
2018-2027 வரை நடக்க இருக்கும் 10 வருட ஐபிஎல் போட்டிகளில் ஐந்து வருடங்களுக்கான ஒளிபரப்பு உரிமைக்கான இதில் ஸ்டார் இந்தியா மற்றும் சோனி நிறுவனத்தின் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
டிஜிட்டல் ஒளிபரப்பு
டிஜிட்டல் முறையில் ஒளிபரப்ப அமேசான், ரிலையன்ஸ் ஜியோவுடன் இப்போது டிவிட்டர் நிறுவனமும் போட்டியில் குதித்துள்ளது.


Click it and Unblock the Notifications