மும்பை: வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு ஆசிய சந்தையின் மந்தமான வர்த்தகத்தின் மூலம் கணிசமான உயர்வை எட்டிய நிலையில் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் சரிவை தழுவியது.
திங்கட்கிழமை வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் குறியீடு 14 வாரச் சரிவையும், நிஃப்டி குறியீடு 10 வாரச் சரிவையும் எட்டி முதலீட்டாளர்களுக்குக் கவலையை அளித்தது.
காலை 11.50 வரை நிலையான வர்த்தகத்தைப் பெற்று லாபத்தில் வர்த்தகம் செய்து வந்த சென்செக்ஸ் குறியீடு ஐரோப்பிய வர்த்தகத் துவக்கத்தில் சரிவைடைந்தது. இவ்வார இறுதியில் ஐரோப்பிய மத்திய வங்கி வெளியிட உள்ள வருவாய் மற்றும் வர்த்தக முடிவுகள் முதலீட்டாளர்களை எச்சரித்துள்ளது. இதனால் ஐரோப்பிய சந்தையில் அதிகளவிலான வர்த்தகச் சரிவு ஏற்பட்டது.

இதன் எதிரொலியை ஆசிய சந்தையிலும் பாதித்ததால் சீனா மற்றும் இந்திய சந்தைகள் அதிகளவில் பாதித்தது. இதனால் மதிய நேரத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சரிவை நோக்கிப் பயணிக்கத் துவங்கியது.
3.30 மணிக்கு முடிந்த மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 143.63 புள்ளிகள் சரிந்து 27,529.97 புள்ளிகள் எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று மதிய நேர வர்த்தகத்தில் 63 புள்ளிகள் சரிவுடன் 8,520.40 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications