திங்கட்கிழமை வர்த்தக 14 சரிவில் தத்தளித்த சென்செக்ஸ் செவ்வாய்கிழமை ஒரேநாளில் 520 புள்ளிகள் வரை உயர என்ன காரணமாக இருக்கும்.?
மும்பை: சவுதி அரேபியாவில் நிலவி வரும் பல பிரச்சனைகளின் காரணமாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விலை நிலைகள் மாற்றம் அடைந்துள்ளது, இதனால் இன்று காமாடிட்டி சந்தை மிகவும் குறைவான முதலீட்டைப் பெற்றுள்ளது.
இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் இன்று ப்ளூ சிப் பங்குகள் மீது அதிகளவிலான முதலீடு குவிந்து வங்கி பங்குகள் அதிகளவிலான லாபத்தை அடைந்தது.
கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 0.82 சதவீதம் குறைந்து 49.94 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருவதால் நவம்பர் மாதத்திற்குக் கச்சா எண்ணெய் விலையில் மிககுறைவான மாற்றத்தைச் சந்தித்துள்ளது.
இதனால் கமாடிட்டி சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்கள் இன்று அதிகளவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் துவங்கினர். இதனால் ஆசிய, ஐரோப்பிய சந்தையில் நிலையான வர்த்தகம் மற்றும் வளர்ச்சியை அடைந்துள்ளது.
அமெரிக்க சந்தை
அமெரிக்க மத்திய வங்கி, டிசம்பர் மாதம் நடைபெறும் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி உயர்த்தத் திட்டமிட்டுள்ள செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் உற்பத்தி அளவுகள் குறைந்துள்ளது. இதனால் வட்டி விகிதங்களை உயர்த்துவதில் சிக்கல் ஏற்படும் எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இதன் எதிரொலியாக ஆசிய சந்தை மற்றும் ஐரோப்பிய சந்தைகள் இன்று அதிகளவிலான லாபத்தை அடைந்தது.
ஆசிய சந்தை
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஆசிய சந்தையில் சீனா, ஹாங்காங் ஆகியவை 1.40 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. இதேபோல் ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகள் 0.40 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.
இதனால் மும்பை பங்குச்சந்தையின் காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 350 புள்ளிகள் வரை உயர்ந்தது.
முக்கியக் காரணம்
ஆசிய சந்தையின் வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் உள்நாட்டுச் சந்தையில் நிலவும் சாதகமான வாய்ப்புகள் மும்பை பங்குச்சந்தையில் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்யத் தூண்டியது.
ஐரோப்பிய சந்தை
மதிய நேரத்தில் ஐரோப்பிய சந்தை வர்த்தகத் துவக்கத்தில் இங்கிலாந்து, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ் ஆகியவை குறைந்தபட்சம் 0.48 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.
இதனால் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகளுக்கு அதிகமான வளர்ச்சியை எட்ட உதவியது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 52.91 புள்ளிகள் உயர்ந்து 28,050 புள்ளிகளை அடைந்து 14 வாரச் சரிவில் இருந்து தற்போது மீண்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குப் பங்குச்சந்தை உயர்வுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல் தொடர் உயர்வைச் சந்தித்த நிஃப்டி குறியீடு இன்று 157.50 புள்ளிகள் உயர்ந்து 8,677.90 புள்ளிகளை அடைந்து செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் அனைத்து நிறுவனங்களும் லாபத்தைச் சந்தித்த நிலையில் ஏசியன் பெயின்ட்ஸ், ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications