திங்கட்கிழமை வர்த்தகத்தில் 14 வார சரிவை சந்தித்த சென்செக்ஸ், இன்று 250 புள்ளிகள் வரை உயர்ந்தது.
மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் நிலையான ஆசிய சந்தை வர்த்தகத்தின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் மளமளவென உயரத் துவங்கியது.
அமெரிக்கச் சந்தையின் உற்பத்தி அளவுகள் குறைந்ததாலும், உள்நாட்டுச் சந்தையில் நிலவும் சாதகமான வாய்ப்புகளின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்யத் துவங்கினர்.
மேலும் அமெரிக்க மத்திய வங்கி, டிசம்பர் மாதம் நடைபெறும் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி உயர்த்தத் திட்டமிட்டுள்ள இந்நிலையில் அமெரிக்காவில் உற்பத்தி அளவுகள் குறைந்துள்ளது. இதனால் வட்டி விகிதங்களை உயர்த்துவதில் சிக்கல் ஏற்படும் எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய சாதகமான சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகம் துவக்கம் முதலே மளமளவெனத் துவங்கியுள்ளது.
11.30 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 231.50 புள்ளிகள் உயர்ந்து 27,761.47 புள்ளிகளை எட்டியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 64.85 புள்ளிகள் உயர்ந்து 8,586.90 புள்ளிகள் வரை இன்று உயர்ந்துள்ளது.
மேலும் கச்சா எண்ணெய்-யின் விலை குறைந்துள்ளதால் அன்னிய முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டுச் சந்தை முதலீட்டாளர்களை வரை அனைத்துத் தரப்பினரும் தற்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications