மும்பை: புதன்கிழமை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தில் அதிகளவில் தங்களது பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் மும்பை பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் துவக்கம் முதல் தொடர் சரிவை எட்டியது.
செவ்வாய்க்கிழமை அமெரிக்கச் சந்தையில் மிகவும் குறைவான அளவிலான வர்த்தகத்தை அடைந்ததால், சீனாவின் இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்தது.

இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஐரோப்பிய சந்தையும் இதில் பாதிக்கப்பட்டது. மேலும் ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்த அறிவிப்புகளால் சந்தையில் இன்று முதலீடு கணிசமாகக் குறைந்துள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 66.51 புள்ளிகள் சரிந்து 27,984.37 புள்ளிகள் வரை சரிந்தது. நிஃப்டி குறியீடு 18.80 புள்ளிகள் சரிந்து 8,659.10 புள்ளிகள் வரை சரிந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications