இன்றைய வர்த்தக சரிவிற்கு அமெரிக்க சந்தையும், ஜிஎஸ்டி வரியும் தான் காரணமாம். தெரியுமா உங்களுக்கு.?
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்காவில் உற்பத்தி அளவுகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது. இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையிலும் சென்செக்ஸ் 520 புள்ளிகள் வரை உயர்ந்து.
புதன்கிழமை காலை வர்த்தகத்தில் சீன சந்தை வெறும் 0.12 சதவீத உயர்வை மட்டும் அடைந்து, ஹாங்காங் சந்தையைக் கவிழ்த்தது. இதன் எதிரொலியாகச் சென்செக்ஸ் குறியீடு 0.21 சதவீதம் சரிந்துள்ளது.

இன்று காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 63.49 புள்ளிகள் சரிந்து 28,000 புள்ளிகளில் இருந்து இறங்கி 27,987.39 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 18.25 புள்ளிகள் குறைந்து 8,659.65 புள்ளிகளை எட்டியுள்ளது.
இன்றைய வர்த்தகச் சரிவிற்குச் செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்கப் பங்குச்சந்தை பெற்ற குறைவான வர்த்தகம் மற்றும் இந்திய சந்தையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளும் காரணமாக அமைவதாகத் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications