145 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!
அமெரிக்க பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆசிய சந்தையில் அதிகளவிலான வர்த்தகம் பெற்றது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தக துவக்கம் முதல் தொடர் முதலீட்டு மூலம் அதிகளவில் வர்த்தகத்தை பெற்று வந்தது.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 145.47 புள்ளிகள் உயர்ந்து 28,129.84 புள்ளிகளை எட்டியது, நிஃப்டி குறியீடு 40.30 புள்ளிகள் உயர்ந்து 8,699.40 புள்ளிகளை இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் லூப்பின், ஹிந்தூஸ்தான், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, இன்போசிஸ், எச்டிஎப்சி வங்கி, ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications