53 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 வாரச் சரிவை எட்டிய நிலையில் மும்பை பங்குச்சந்தையில் முதலீடு அளவு குறையாவிட்டாலும் வர்த்தக எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு ஒரு புறம் இருந்தாலும், கச்சா எண்ணெய் விலை சரிவு ஆசிய சந்தையின் வர்த்தகத்தைப் பாதித்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 52.66 புள்ளிகள் சரிந்து 28,.077.18 புள்ளிகள் அடைந்தது. நிஃப்டி குறியீடு 6.35 புள்ளிகள் குறைந்து 8,693.05 புள்ளிகள் எட்டி இந்த வார வர்த்தகம் முடிவிற்கு வந்தது.



Click it and Unblock the Notifications