தீபாவளி, திருமணம் சீசன் எதிரோலி: தங்கம் விலை உயர்வு..!
தற்போது அதிகளவிலான திருமணம் முகூர்த்தங்கள் மற்றும் தீபாவளி பண்டிகை வருவதன் எதிரொலியாக இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடும் வர்த்தகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்குத் துணையாகச் சர்வதேச சந்தை வர்த்தகமும் மிகவும் சாதகமான சூழ்நிலையில் நிலவுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் சனிக்கிழமை வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 120 ரூபாய் உயர்ந்து 30,520 ரூபாயாக உயர்ந்தது.
அதேபோல் வெள்ளியின் விலை 700 ரூபாய் உயர்ந்து 1 கிலோ வெள்ளியின் விலை 43,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை: https://goo.gl/p1cnMJ
சென்னையில் இன்றைய வெள்ளி விலை: https://goo.gl/mTLzqi


Click it and Unblock the Notifications