வெள்ளிக்கிழமை அதிகளவிலான முதலீட்டையும் வர்த்தகத்தையும் எதிர்பார்த்த நிலையில் மிகவும் கணிசமான வர்த்தகத்தை மட்டுமே பெற்ற மும்பை பங்குச்சந்தை.
தீபாவளி பண்டிகையின் எதிரொலியாக இந்தியா சந்தையில் முதலீட்டு அளவுகள் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று மிகவும் குறைவான வர்த்தகத்தை மட்டுமே பெற்றது.
வெள்ளிக்கிழமை காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கிய நிலையில் 10.00 மணிக்கு மேல் நிலையான வர்த்தகத்தை பெற துவங்கியது.
வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 25.61 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 27,941.51 புள்ளிகளை எட்டியது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து 22.75 புள்ளிகள் உயர்ந்து 8,638 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
இந்திய சந்தையில் நிலவும் நிலையற்ற வர்த்தகத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவில் ப்ளு சிப் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்தனர். இதுவே நிஃப்டி குறியீட்டின் அதிகளவிலான உயர்விற்கு முக்கிய காரணமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications