தங்கம் விலை கிராமிற்கு 4 ரூபாய் உயர்வு..!
சென்னையில் இன்று தங்கத்தின் விலை கிராமிற்கு 4 ரூபாய் அளவிற்கு உயர்ந்தது.
பொதுவாகப் பண்டிகை காலங்களில் தங்கம் விலை உயர்ந்து காணப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள் அதிகளவில் வருவதால் இந்தியாவில் தங்கம் மீதான முதலீடும் வர்த்தகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் தங்கத்தின் விலையில் அதிகளவிலான உயர்வு காணப்பட்டது.
சென்னையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4 ரூபாய் உயர்ந்து 2,855 ரூபாயில் இருந்து 2,859 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதேபோல் 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5 ரூபாய் உயர்ந்து 3,054 ரூபாயில் இருந்து 3,059 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.



Click it and Unblock the Notifications