டொனால்டு டிரம்ப் 'வெற்றி' பெறும் முன்பே 'இந்திய சந்தை' ஆட்டம்கண்டது..!

தேர்தலுக்கு முன்பே இப்படினா.. தேர்தலுக்கு பின் சொல்லவே வேண்டாம்.!

மும்பை: உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்காவில் அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைவதால் அடுத்த அதிபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவைப் போல் அல்லாமல் அமெரிக்காவில் ஒருவர் அதிபராக 2 ஆட்சிக்காலம் தான் இருக்க வேண்டும். இதன் படி இனி பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்க முடியாது. இதனால் புதிதாக ஒருவர் அதிபர் தேர்தலில் நிற்க வேண்டும்.

இந்நிலையில் அதிபர் பதவிக்குப் போட்டி போடும் முக்கியத் தலைவர்களின் டொனால்டு டிரம்ப் மற்றும் ஹிலாரி கிலிண்டன் முன்னணியில் தற்போது உள்ளது.

சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பு, அமெரிக்கா மக்கள் புதிய மாற்றத்தை நோக்கிச் செல்வதாகத் தெரிகிறது. இந்த மாற்றத்தால் இந்திய பங்குச்சந்தையில் இன்று ஒரு நாள் மட்டும் சுமார் 350 புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்களை அதிர வைத்துள்ளது.

நேருக்குநேர் விவாதம்

நேருக்குநேர் விவாதம்

அமெரிக்காவில் தேர்தல் நாள் (நவம்பர் 8) நெருங்கி வரும் நிலையில் அடுத்தடுத்து நடக்கும் அதிபர் வேட்பாளர்கள் மத்தியிலான நேருக்குநேர் விவாதம், மக்கள் மத்தியில் அதிகளவிலான மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது, குறிப்பாக ஹிலாரி கிளிண்டன் மீதான பார்வை மிகப்பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது.

இந்த மாற்றத்தின் எதிரொலி தான் வாக்கெடுப்பில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம்.

 

வாக்கெடுப்பு

வாக்கெடுப்பு

அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனம் எடுத்த வாக்கெடுப்பில் அமெகிக்க மக்கள் டொனால்டு டிரம் பக்கம் 46 சதவீதம் பேர் ஆதரவும் அளித்துள்ளது. ஆனால் ஹிலாரி கிளிண்டன் முதல் முறையாக டிர்ம்பை விட 45 சதவீதம் என்ற குறைவான ஆதரவைப் பெற்றுள்ளார்.

இதனால் டிரம்பிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாகத் தெரிகிறது.

 

இந்தியா

இந்தியா

டிரம்ப் வெற்றிபெற்றால் இந்திய, சீனா போன்ற முக்கிய நாடுகளின் வளர்ச்சி அதிகளவில் பாதிக்கும் எனத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் தனது முக்கியக் கணிப்புகளை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் டிரம்பிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் இத்தகைய சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தை இன்று சந்தித்த மோசமான நிலையை நீங்களே பாருங்கள்.

 

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதலே சரிவில் தத்தளித்த மும்பை பங்குச்சந்தை அமெரிக்கச் சந்தையால் சீனாவும், சீன சந்தையால் இந்திய பங்கு சந்தையும் தொடர்ந்து பாதிக்கப்பட்டது.

இதனால் வர்த்தகம் முடியும் வரை சென்செக்ஸ் குறியீடு மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பெற்றது.

 

 

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

புதன்கிழமை மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 3.15 மணியளவில் 365 புள்ளிகள் வரை சரிந்தது. இன்றைய வர்த்தகம் முடியும் நிலையில் சென்செக்ஸ் குறியீடு 349.39 புள்ளிகள் சரிந்து 27,527.22 புள்ளிகள் அடைந்தது.

நிஃப்டி குறியீடு..

நிஃப்டி குறியீடு..

சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடும் இன்று தொடர் சரிவில் 112.25 புள்ளிகள் சரிந்து 8,514.00 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.

 முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

இன்றைய வர்த்தகத்தில் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் மஹிந்திரா, என்டிபிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆக்சிஸ் வங்கி தவிர அனைத்து நிறுவனங்களும் சரிவை தழுவியது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+