தங்கம் விலை கிராமிற்கு 11 ரூபாய் உயர்வு..!
பங்குச்சந்தை வீழ்ச்சியால் தங்கம் மீதான முதலீடு உயர்வு.
சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் பெடரல் ரிசர்வின் வட்டி விகிதம் குறித்த எதிரொலிகள் சர்வதேச பங்குச்சந்தை வர்த்தகத்தை அதிகளவில் பாதித்துள்ளது.
இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தங்கம் மீது முதலீடு செய்யத் துவங்கினர். இதன் காரணமாக இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் தங்கத்தின் விலை உயர்வுடன் காணப்பட்டது.

வியாழக்கிழமை காலை வர்த்தகத்தைப் பொறுத்த வரை 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 11 ரூபாய் உயர்ந்து 2,913 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 11 ரூபாய் உயர்ந்து 3,115 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்று கணிசமான உயர்வை மட்டுமே சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளி பார் விலை 44,645 ரூபாய்.


Click it and Unblock the Notifications