5 நாள் சரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை..!
மும்பை: 5 நாட்கள் தொடர் சரிவைச் சந்தித்த மும்பை பங்குச்சந்தை திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஏறுமுகத்தைக் கண்டது. நாளை அமெரிக்காவில் அதிபர் தேர்தல் துவங்க உள்ள நிலையில் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எப்பிஐ அளித்த பதில் அமெரிக்கச் சந்தைக்கு மிகவும் சாதகமான அமைந்தது.
கடந்த 5 வர்த்தக நாட்களில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 667 புள்ளிகள் வரை சரிந்தது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஹிலாரி கிளின்டன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எப்பிஐ அளித்த சாதகமான பதிலால் சர்வதேச சந்தை வர்த்தகம் இன்று அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது.

இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 184.84 புள்ளிகள் உயர்ந்து 27.458.99 புள்ளிகளை எட்டியது.
அதேபோல் நிஃப்டி குறியீடு இன்று தொடர் வர்த்தக உயர்வில் 63.30 புள்ளிகள் உயர்ந்து 8,497.05 புள்ளிகளை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்களும் சரி, உள்நாட்டு முதலீட்டாளர்களும் சரி அதிகளவில் வங்கி மற்றும் பார்மா துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்தனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications