மும்பை: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டனின் வெற்றி வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதால் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஆசிய சந்தையில் முதலீடு குவிந்தது.
இதன் எதிரொலியாக ஆசிய சந்தையில் சீனா, ஹாங்காங், தைவான் ஆகிய சந்தைகளின் வர்த்தகம் சிற்பாக இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் ஜப்பான் பங்குச்சந்தை குறியீடான நிக்கி மட்டும் 0.03 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்து வந்த சென்செக்ஸ் குறியீடு ஐரோப்பிய சந்தை துவக்கத்திற்குப் பின் ஏறுமுகத்தைக் கண்டது. இதனால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 132.15 புள்ளிகள் உயர்ந்து 27,591.14 புள்ளிகளை அடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடு மதியம் 2 மணிக்கு மேல் அதிகரிக்கத் துவங்கியது இதனால் வர்த்தக முடிவில் 46.50 புள்ளிகள் உயர்ந்து 8,543.55 புள்ளிகளை அடைந்தது.