அடுத்த சில வாரங்களுக்கு கேஷ் ஆன் டெலிவரி முறையிலான வர்த்தகத்தை ரத்து செய்துள்ளது பிளிப்கார்ட், அமேசான்.
இந்தியாவில் மிகவும் குறைந்த காலத்தில் அதிகளவிலான வளர்ச்சி, சரிவு என இரண்டையும் சந்தித்த ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மத்திய அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து கேஷ் ஆன் டெலிவரி முறையைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
உலகத்தையே அதிர்ச்சியில் மூழ்கடித்த மோடியின் அறிவிப்பு ஈகாமர்ஸ் துறையையும் விட்டு வைக்கவில்லை.
பிளிப்கார்ட்
நாட்டின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் 2000 ரூபாய்க்கு அதிக மதிப்புடை பொருட்களை ஆர்டர் செய்வோருக்குக் கேஷ் ஆன் டெலிவரி முறையை ரத்து செய்துள்ளது.
அமேசான்
இந்திய சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனத்திற்குப் போட்டியாக இருக்கும் அமேசான் நிறுவனம் 2,000 ரூபாய்க்கு அதிக மதிப்புடை பொருட்களை ஆர்டர் செய்வோருக்குக் கேஷ் ஆன் டெலிவரி முறையை ரத்து செய்துள்ளது.
500, 1000 ரூபாய்க்கு தடை..!
மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவுகள் மூலம் சாமானியர்களுக்கு அதிகளவிலான தொந்தரவு இருந்தாலும் நாட்டில் முடங்கிக்கிடக்கும் ரூபாய் நோட்டுகளை வெளியில் கொண்டு வருவதற்கு இதுவே சிறந்த வழி.
டாடா முதல் அதானி வரை
இந்த அறிவிப்பால் அம்பானி, அதானி, பிர்லா, போன்றவர்களுக்கும் அதிகமாகப் பாதிப்பு ஏற்படும். உதாரணமாக நீங்கள் ஒரு டாடா குழுமத்தில் டீலர் உங்கள் வர்த்தகத்திற்காகப் பல்க் டீலாக உதிரி பாகங்களை வாங்க வேண்டும் என்றால் நேற்று வரை எளிதாகப் பணத்தைக் கொடுத்து வாங்க முடியும்.
ஆனால் தற்போது 100 ரூபாய் நோட்டுகளாக எவ்வளவு கொண்டு போகமுடியும், டீலர் தான் எவ்வளவு தொகையை வாங்கி வைக்க முடியும். கொஞ்சம் கஷ்டம் தான் இதனால் அனைத்தும் வங்கி பரிமாற்றம் வாயிலாக நடக்கும் போது வர்த்தகத்தில் சேமிக்கப்படும் கருப்புப் பணம் இதன் மூலம் வெளியில் வரும். இதனால் டாடா போன்ற பெரு நிறுவனங்களுடன் வியாபாரம் செய்யும் வர்த்தகர்கள் முதல் டாடாவின் வர்த்தகம் வரை பாதிக்கும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications