இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் ஆகிய இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தின் துவக்கத்தில் 800 புள்ளிகள் அளவிலான சரிவை சந்தித்தது.
மதியம் 12 மணியளவில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகளில் வெளியானதில் Republican கட்சியின் வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றார். இதன் பின்னான வர்த்தகத்தில் தொடர் உயர்வைச் சந்தித்தது மும்பை பங்குச்சந்தை.

புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பைபங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 338.61 புள்ளிகள் உயர்ந்து 27,252.53 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடும் இன்று மிகப்பெரிய அளவிலான சரிவிற்குப் பின் 111.55 புள்ளிகள் சரிந்து 8,432.00 புள்ளிகள் அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் டிசிஎஸ், மாருதி, ஹீரோமோட்டோகார்ப், மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, எச்டிஎப்சி, ஐடிசி, இன்போசிஸ் ஆகியவை அதிகளவிலான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications