700 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. அட என்னதான் நடக்குது..?

மும்பை: புதன்கிழமை வெளியான அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் பலரும் எதிர்பார்க்காத ஏன் விரும்பாத வகையில் ஹிலாரி கிளின்டனை தோற்கடித்து டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றார் இதனால் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான சரிவை சந்தித்தது.

புதன்கிழமை சரிவிற்கு மோடி வெளியிட்ட அறிவிப்பும் முக்கியக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் வியாழக்கிழமை வர்த்தகத்தில் நிலையிலான வர்த்தகத்துடன் 250 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 700 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது.

இன்றைய சரிவிற்கு 5 காரணங்களை மிக முக்கியமானதாகப் பார்க்கிறது தமிழ் குட்ரிட்டன்ஸ்.

அமெரிக்காவில் பத்திர லாபங்கள் உயர்வு..!

அமெரிக்காவில் பத்திர லாபங்கள் உயர்வு..!

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் அடுத்தப் பிரதமர் டொனால்டு டிரம்ப் அவர்களின் திட்டங்கள் அந்நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திப் பெடரல் ரிசர்வ் இந்நாட்டின் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வங்கிகளில் வட்டி விகிதம் உயர்ந்தால் கடன் மற்றும் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீட்டுப் பத்திரங்களின் வட்டி விகிதமும் உயரும். இதன் காரணமாகச் சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் அனைவரும் அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.

 

அன்னிய முதலீடு வெறியேற்ப்பு

அன்னிய முதலீடு வெறியேற்ப்பு

அமெரிக்கச் சந்தையில் பத்திர முதலீட்டில் அதிக லாபம் உள்ளதைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருக்கும் அதிகளவிலான அன்னிய முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.

இதனால் இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டு அளவுகள் அதிகளவில் குறைந்து பங்குச்சந்தை குறியீடுகள் மிகவும் மோசமான நிலையை அடைந்தது.

 

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

அமெரிக்கச் சந்தையில் முதலீடு அதிகரித்துக் காணப்படுவதால் உலகளவில் டாலரின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 52 பைசா குறைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 67.18 ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

 காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

2016-17ஆம் நிதியாண்டில் இந்தியாவில் பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சொல்லும்படியாக இல்லை, இதனால் அடுத்தக் காலாண்டிலும் லாப அளவுகள் அதிகளவில் இருக்காது எனக் கருத்து நிலவுகிறது. இதனால் நிறுவனங்களில் முதலீட்டு அளவுகளும், சந்தையில் பங்குகள் மீதான முதலீடும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

 

 

லாப நோக்கத்தில் விற்பனை

லாப நோக்கத்தில் விற்பனை

அமெரிக்கச் சந்தையில் முதலீட்டாளர்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் உள்ளதால் இந்தியா சந்தை அதிகளவில் பாதிக்கப்படும் என்று கணித்த முதலீட்டாளர்கள் லாப நோக்கில் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் சரிவடையத் துவங்கி மும்பை பங்குச்சந்தை வாரத்தின் கடைசி நாள் முடிவில் 700 புள்ளிகளை இழந்தது.

இன்றைய சரிவிற்கு மேலே குறிப்பிட்டவை முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

 

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 698.86 புள்ளிகள் குறைந்து 26,818.82 புள்ளிகளை அடைந்துள்ளது.

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போல் தொடர் வர்த்தகச் சரிவில் 229.45 புள்ளிகள் இழந்து 8,296.30 புள்ளிகளை அடைந்து இந்த வாரம் வர்த்தகம் முடிவிற்கு வந்தது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன் பார்மா மட்டுமே லாபத்தைச் சந்தித்துள்ளது.

மேலும் டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ஸ், ஹீரோமோட்டோ கார்ப், ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகியவை 5 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்துள்ளது.

 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+