765 கோடி ரூபாய் நஷ்டத்தில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி..!
நாட்டின் முன்னணி வங்கியான இந்தியன் ஒவர்சீஸ் வங்கி செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் 765 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 551 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
2016-17ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி 1,450 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த நிலையில் தற்போது 765 கோடி ரூபாய் நட்டத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 30ஆம் தேதி முடிந்த காலாண்டில் 5,962 கோடி ரூபாய் வருமானத்தை பெற்றுள்ளது.
மேலும் இக்காலக்கட்டத்தில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் செயற்படா சொத்துக்களின் அளவு 34,724 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் தற்போது 33,913 கோடி ரூபாயாக இருந்தது.


Click it and Unblock the Notifications