ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து எத்தனைக் கோடிக்கு இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு..?
நவம்பர் 8 முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த உடன் பயந்த மக்கள் முதலில் அதை மாற்ற முயன்ற இடம் என்றால் அது நகை கடைகள் தான்.

இதை பயன்படுத்திக் கொண்ட நகை கடைக்காரர்கள் கல்லா கட்ட முயல ஒரே இரவில் 1500 ரூபாய் விலை உயர்ந்தது தங்கத்தின் விலை.
அறிவிப்பு வெளியான முதல் நாளான 8 ஆம் தேதி 216 கோடிக்கு இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதுவே 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் 10 மடங்கு வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 7 ஆம் தேதி 810 கோடி ரூபாய்க்குத் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, 8 ஆம் தேதி 216 கோடி ரூபாய்க்கும், 9 ஆம் தேதி 289 கோடிக்கும், 10 ஆம் தேதி 2,229 கோடி ரூபாய்க்கும், 11 ஆம் தேதி 2,374 கோடி ரூபாய்க்கும், 12 ஆம் தேதி 379 கோடி ரூபாய்க்கும் தங்க இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் அனைத்தும் ஹவ்இந்தியாலைவ்ஸ்.காம் மற்றும் ஐஸ்கேட்.ஜிஓவி.இன் என்ற இணையத்தளத்தில் இருந்து எடுத்து வழங்கப்பட்டுள்ளது
இதைப் பார்க்கும் போது மக்கள் பயத்தை பயன்படுத்திக் கொண்டு விடிய விடிய நகை கடை காரர்கள் பணத்தை அள்ளியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications