500 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ்..!
இந்திய பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்ட காரணத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகளவிலான சரிவை சந்தித்தது.
இதனுடன் அமெரிக்கச் சந்தையில் வட்டி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதால் ஆசிய சந்தையில் வர்த்தகப் பாதிப்பின் அளவு மிகவும் அதிகமாகத் தெரிகிறது.

இதன் எதிரொலியாகச் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய தொடர் விடுமுறைக்குப் பின் செவ்வாய்க்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் இருந்தே அதிகளவிலான சரிவை சந்தித்தது.
1 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 398.72 புள்ளிகள் சரிந்து 26,420.10 புள்ளிகளை எட்டியது. நிஃப்டி குறியீடு 148.80 புள்ளிகள் சரிவை கண்டு 8,137.80 புள்ளிகளை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications