மும்பை: இந்தியாவில் கருப்புப் பணம் ஒழிப்பிற்காகப் பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்கப் பெடரல் வங்கி வட்டி உயர்வுக்கான அதிர்வுகள் ஆகியவை ஆசிய சந்தையை அதிகளவில் பாதித்துள்ளது.
இதனால் இந்திய சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் காலை வர்த்தகம் துவக்கம் முதல் மும்பை பங்குச்சந்தை சரிவுடனே காணப்படுகிறது. மேலும் இன்றைய வர்த்தகப் பாதிப்பிற்கு டாலர் மதிப்பின் 14 வருட உயர்வு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 514.19 புள்ளிகள் குறைந்து 26,304 புள்ளிகளை அடைந்துள்ளது. மேலும் நிஃப்டி குறியீடு 187.85 புள்ளிகள் சரிந்து 8,108.45 புள்ளிகள் எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
மேலும் அக்டோபர் மாதத்தில் தீபாவளி, தசரா பண்டிகை காரணமாக இந்தியாவில் தொழிற்சாலை உற்பத்தி அளவுகள் அதிகளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. அதிலும் உற்பத்தித் துறையில் பாதிப்பு சற்று அதிகமாகக் காணப்படுகிறது. இதுவும் இன்றைய வர்த்தகச் சரிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications