மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை.. சென்செக்ஸ் குறியீடு 71 புள்ளிகள் சரிவு..!
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மாற்றத் திட்டமிடுவதாலும், ஆசிய சந்தையில் மந்தமான வர்த்தகம் நிலவும் காரணத்தால் இந்திய சந்தையில் அதிகளவிலான ஏற்ற இறக்கம் காணப்பட்டது.ய
இன்றைய வர்த்தகச் சந்தையில் அமெரிக்க மற்றும் ஆசிய சந்தையில் ஸ்திரமற்ற நிலையால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர்.

அதிலும் முக்கியமாக நுகர்வோர், ரியல் எஸ்டேட், மின்சாரம், ஐடி, டெலிகாம் துறையைச் சார்ந்த நிறுவனங்களின் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர்.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 71.07 புள்ளிகள் சரிந்து 26,227.62 புள்ளிகளை அடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போல் அதிகளவிலான ஏற்ற இறக்கத்தைச் சந்தித்த நிஃப்டி குறியீடு 31.65 புள்ளிகள் சரிந்து 8,079.95 புள்ளிகள் எட்டிய இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.


Click it and Unblock the Notifications