நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ சில நாட்களில் குறுகிய காலக்கடனுக்கான வட்டியை குறைத்த தற்போது பல்க் டெப்பாசிட் மீதான வட்டியை குறைத்துள்ளது.
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை விதிக்கப்பட்ட நாள் முதல் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் டெப்பாசிட் குவிந்த வண்ணமாக உள்ளது.
இதனால் அடுத்த 6 மாதத்திற்கு வங்கிகள் மிகவும் தாராளமாக மக்களுக்குக் கடன் அளிக்கும் அளவிற்குப் பணம் வைப்பு நிதி மற்றும் பிற முதலீட்டுத் திட்டங்களில் குவிந்துள்ளது. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திப் பல்க் டெப்பாசிட் எனப்படும் பெரிய தொகை டெப்பாசிட்களுக்கு வட்டியைக் குறைத்துள்ளது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா.

1 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரையில் வைப்புச் செய்யப்படும் திட்டத்தையே பல்க் டெப்பாசிட் என்று அழைக்கப்படுவது வழக்கம். இத்தகைய டெப்பாசிட்களின் வட்டி விகிதத்தை 1.9 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.
7 நாட்கள் முதல் 10 வருடம் வரையிலான முதிர்வு காலம் கொண்ட இத்தகைய பல்க் டெப்பாசிட்களின் மீதான வட்டி விகிதம் 1.9 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் இனி வைப்பு செய்வோருக்கு 3.85 சதவீதம் வட்டி வருமானம் மட்டுமே கிடைக்கும்.
வட்டி குறைப்பிற்கு முன் இதன் அளவு 5.75 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வட்டிக் குறைப்பு ரீடைல் வாடிக்கையாளர்களைக் கண்டிப்பாகப் பாதிக்காது என எஸ்பிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் இனி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நாள் முதல் இந்திய வங்கிகளில் 5 லட்சம் கோடி ரூபாய் வைப்பு செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 9 லட்சம் கோடி திரட்டுவது எப்போது.


Click it and Unblock the Notifications