118 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!
திங்கட்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் ஆசிய சந்தையில் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவால் இந்திய சந்தையிலும் கணிசமான சரிவுடன் மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் துவங்கியது.
இதன் பின் இத்தாலி பிரதமரின் ராஜினாமா-வின் எதிரொலியாக ஐரோப்பிய சந்தையில் இருந்து அதிகளவிலான இந்திய சந்தையில் முதலீடு செய்யப்பட்டது.

மதியம் 1.30 மணிக்கு மேல் உயரத் துவங்கிய மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு ப்ளூ சிப் பங்குகள் மீதான அதிக முதலீட்டின் மூலம் 100 புள்ளிகளுக்கும் அதிகமான அளவிற்கு உயர்ந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 118.44 புள்ளிகள் உயர்ந்து 26,349.10 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 41.95 புள்ளிகள் உயர்ந்து 8,128.75 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications