180 புள்ளிகள் வரை உயர்ந்தது சென்செக்ஸ் குறியீடு..!
நாட்டின் பணவீக்கம் தகவல்கள் மற்றும் அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்விற்கான சாதகமான வாய்ப்புகள் மற்றும் அதன் குறித்த அறிவிப்புகள் புதன்கிழமை வெளிவர உள்ள நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 190 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 182.58 புள்ளிகள் உயர்ந்து 26,697.82 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 51.00 புள்ளிகள் உயர்ந்து 8,221.80 புள்ளிகள் வரை உயர்ந்து இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், விப்ரோ, ஆக்சிஸ் வங்கி, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை எட்டியுள்ளது. மேலும் நிஃப்டி குறியீடு கெயில், டாடா ஸ்டீல், லுபின், ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் சரிவில் உள்ளது.



Click it and Unblock the Notifications