தங்கம் விலையில் மாற்றமில்லை.. சென்னையில் மந்தமான வர்த்தகம்..!
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-இன் நாணய கொள்கை கூட்டம் இன்று துவங்கிய உள்ள நிலையில் 2016ஆம் ஆண்டில் முதல் முறையாகத் தனது வட்டியை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது பெடரல் ரிசர்வ்.
இதனால் அமெரிக்கச் சந்தையின் இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது. இதன் தாக்கம் இந்திய சந்தையில் நாளைய தெரியவரும் நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகச் சந்தையில் தங்கம் விலையில் எந்த மாற்றமுமில்லை.
செவ்வாய்க்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 2,836 ரூபாயாகவும், 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2,712.00 ரூபாயாக உள்ளது.



Click it and Unblock the Notifications